தீக்குள் ஒரு தவம் – அத்தியாயம் – 8

Tamil Kamakathaikal ” மூங்கில் கொண்டு செய்த..

” மூன்று புல்லாங்குழல்!

” உயிர்காற்றால் ஊதப்படும்..

” உணர்ச்சிமிக்க புல்லாங்குழல்!

” இன்றோ,,

” ஒன்று உயிரால் ஊமையானது!

” ஒன்று மனதால் ஊமையானது!

” ஒன்று நிஜத்தில் ஊமையானது!

” இவர்களின் நட்பெனும் இசை…

” இருண்டு போன இவ்வேளையில்..

” இசைக்கப்படாமலேயே…

” முடிந்து போனதோ!

ஆதார சக்தியே இழந்த மூன்று அபலைகள் இதோ!

Tamil Sex Stories உணர்வை அடக்க முயன்று தோற்றுப் போனதில் கண்கள் ரத்தமென சிவந்து மூக்கில் நீர் வடிய… வாயோரம் இழுத்துக் கொண்டு அதனோரம் உமிழ்நீராய் வழிந்தது… மேல் சட்டையின்றி கால்களை விரித்து தரையில் அமர்ந்து இரு கைகளையும் விரித்து ஆவேசத்துடன் தரையில் அறைவதும்.. பிறகு எதையோ ஏற்க மறுப்பது போல் இரு கைகளாலும் தலைமுடியை பிய்த்துக்கொண்டு இப்படியும் அப்படியுமாக தலையசைப்பதுமாக இருந்த சத்யனைக் கண்டு மனநிலை பாதித்துவிட்டதோ என்று பயந்து போயினர் கூடியிருந்தவர்கள்….

குணாவோ இவ்வுலகிலேயே இல்லாதவன் போல் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தான்… தான் தோப்புக்குப் போகாவிட்டால் சேது இறந்திருக்க மாட்டானோ என்ற எண்ணம் வரும் போதெல்லாம் மார்பில் அறைந்து கொண்டு விண்ணை நோக்கி அவன் பாஷையில் கடவுளைத் திட்டினான்…. திடீரென்று அமைதியாவான்… திடுக்கென்று ஏதோ நினைத்து தன் உடலைப் பார்ப்பான்… சேது வந்து விழுந்த போது ஒட்டிக்கொண்ட அவனது உடல் பாகங்கள் ஆங்காங்கே திட்டுத் திட்டாய் இவன் உடையில் இருக்கும்…. ஒவ்வொன்றாகப் பிய்த்து எடுத்து கையில் வைத்துப்பார்த்து பெருங்குரலெடுத்து கத்துவான்…..

யாரோ நீர் தெளித்து வள்ளியின் மயக்கத்தைத் தெளிவிக்க… சுற்றிலும் தேடியவளின் கண்களில் பட்டது கோடவுனிலிருந்து ஓடி வந்த போது கருகி விழுந்த சேதுவின் உடைகள் தான்…. வேகமாக ஓடிச் சென்று ஒவ்வொன்றாக பொறுக்கியெடுத்தாள்….. கைகளில் வைத்து உற்றுப் பார்த்துவிட்டு சத்யனிடம் ஓடிவந்தாள்…

“சத்தி,, இது போன தீபாவளிக்கு மூணு பேரும் ஒரே மாதிரி எடுத்த உடுப்பு தானே? எம் புள்ளைக்கு அவ்வளவு அழகா இருக்குமே?” என்று ஒன்றும் புரியாதவள் போல் கேட்க….

சட்டென்று நினைவு திரும்பியவன் போல் தாயின் கைகளில் இருந்த உடைகளின் துணுக்குகளை அள்ளி முகத்தில் அடித்துக் கொண்டு “சேது…. அம்மா பாவம்டா… தாங்காது… திரும்பி வந்துடு சேது” என்று அழுதவன் பக்கத்திலிருந்த தாயையும் கட்டிக் கொண்டான்….

ஆதரவுத் தேடி பயந்தவன் போல் ஒதுங்கி நின்றிருந்த குணாவும் ஓடிவந்து இவர்களைக் கட்டிக் கொள்ள… நால்வராய் வாழ்ந்தவர் இன்று மூவராய்ப் போன துயரம் தீருமா என்று பெருங்குரலெடுத்து கதற ஆரம்பித்தனர்…

கூட்டத்தில் இருந்த சில ஆண்கள் கண்ணீருடன் அவர்களை நெருங்கி “ஆனது ஆகிப்போச்சு…. இங்கயே உட்கார்ந்திருக்க முடியாதுப்பா… வாங்க ஆஸ்பத்திரிக்குப் போய் ஆகவேண்டியதைப் பார்ப்போம்” என்று சத்யனைத் தூக்கி நிறுத்தினர்….

இன்னும் கூட நம்ப முடியாப் பார்வையோடு கதறிக்கொண்டிருந்த வள்ளி தரையில் சுருண்டு கிடந்த குணாவைப் பார்த்ததும் அழுகை இன்னும் அதிகமானது…. ஆனால் அதையும் மீறி மற்ற இரு பிள்ளைகளையும் காக்க வேண்டுமே என்ற தாய்மை உணர்வு மேலோங்க கீழே கிடந்த குணாவைத் தூக்கி நிறுத்தி தன் தோளில் சாய்த்துக் கொண்டாள்…

போலீசார் ஒரு ஜீப்பில் வந்தனர்….

அரைகுறையாக எரிந்து போயிருந்த கோடவுனை பார்வையிட்டு விட்டு கூடியிந்தவர்களை விசாரித்தனர்…. பிறகு சத்யனிடம் வந்தவர்கள் அவன் இருக்கும் நிலையை உணர்ந்து எதுவும் கேட்காமல் மருத்துவமனைக்கு வரச்சொல்லிவிட்டு கிளம்பினர்….

சத்யனின் பக்கத்து வீட்டு நண்பன் ஒருவன் போலீசாரிடம் கேட்டுக்கொண்டு அந்த ஜீப்பிலேயே மூவரையும் ஏற்றிவிட்டு அவனும் முன்புறமாக ஏறிக்கொண்டான்…

உயிரற்றுப் போன சேதுவுக்காக உணர்வற்றுப் போன இம்மூவரும் மருத்துவமனை நோக்கிப் பயணமானார்கள்….

உடல் மார்ச்சுவரியில் இருப்பதாக கூறவும் அங்கே அழைத்துச் செல்லப்பட்டு வெளியே உட்கார வைக்கப்பட்டனர்….
சத்யன் திடீர் அழுகையும் சேதுவின் இறுதி நிமிடங்களையும் நினைத்து திடுக்கென்று அதிர்ந்த உணர்வுமாக அப்படியே கிடக்க… குணாவோ தாங்கும் சக்தியில்லாதவன் போல் முற்றிலும் துவண்டு வள்ளியின் மடியில் சாய்ந்திருந்தான்….

செத்துப் போன மகனுக்காக அழுவதா? உயிரோடு இருக்கும் இந்த இருப் பிள்ளைகளுக்காக அழுவதா? என்று புரியாமல் முந்தானையை வாயில் அடைத்து கதறலை வெளியே விடாமல் அடக்கிக் கொண்டிருந்தாள் வள்ளி…

பல கட்டுகள் கை மாறியதால் போலீசாரின் பாரபட்சமான விசாரணை சில நிமிடங்களிலேயே முடிந்து மின் கசிவு காரணமாக தீப்பற்றிக் கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் கூறப்பட்டது…..

அன்று அதிகாலை மூன்று மணியளவில் சேதுவின் உடல் ஒப்படைக்கப்பட்டது…… இவர்களால் எதுவும் முடியாது என்ற நிலையில் பக்கத்து வீட்டு நண்பன் வேலு வள்ளியிடம் கையெழுத்து வாங்கி மருத்துவமனை சம்பிரதாயங்களை முடித்து உடலைப் பெற்றுக் கொண்டு ஊருக்குள் எடுத்து வந்தான்…..

வள்ளியின் வீட்டு வாசலில் சேதுவின் உடல் வைக்கப்பட்டது…… ஊரே கதறியழ இம்மூவர் மட்டும் அழவும் திராணியின்றி ஆளுக்கொருப் பக்கமாக சுருண்டு கிடந்தனர்…..

முதல் நாள் உயிர் விட்ட உடல்… அதுவும் நெருப்பில் வெந்த உடல் என்பதால் சில மணிநேரங்களிலேயே மயானத்திற்கு எடுத்து செல்ல ஏற்பாடுகள் செய்யப் பட்டது…..

சத்யன் தெளிந்ததும் வாங்கிக் கொள்ளலாம் என்று பக்கத்து வீட்டு வேலு தனது கைக்காசையும் பற்றாகுறைக்கு அக்கம்பக்கத்தவரிடம் வாங்கியும் சகல ஏற்பாடுகளையும் செய்தான்….

கொள்ளி வைக்கவேண்டும் என்று சத்யனை எழுப்பி குளிக்க வைக்க முயன்ற போது… சேது இறுதியாக சொன்ன வார்த்தைகள் ஞாபகத்துக்கு வந்தது…

“குணா நம்ம குழந்தைடா” என்றது ஞாபகம் வர… சேதுவுக்கு இறுதி காரியங்களை குணாவே செய்யட்டும் என்றான் சத்யன்…

அதன் பிறகு குணாவுக்கு முகச் சவரம் செய்து மொட்டையடித்து குளிக்க வைக்கப்பட்டு புது வேட்டி உடுத்தி கொல்லி சட்டியை கையில் கொடுக்க… தன் நண்பனுக்கு கொள்ளி வைக்கும் தனது நிலையை எண்ணி தீனமான குரலில் கதறிய குணாவைக் கண்டு கூட்டத்தில் அழுகை வெடித்தது….
மகனை மாலையுடன் திருமணக் கோலத்தில் பார்த்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில்…. இன்று மரணக் கோலத்தில் மாலையுடன் பார்த்துத் தாங்க முடியாத வள்ளி கதறித் துடிக்க சில பெண்கள் வள்ளியைத் தாங்கிப் பிடித்துக் கொண்டனர்…

ஆனால் சத்யன் மட்டும் நேரம் ஆக ஆக கண்ணீர் வற்றிப் போன நிலையில் இறுகிய முகத்தோடு இருந்தான்…. கைக் கோர்த்துக் கொண்டு சுற்றிய நண்பனின் உடலை சுமக்க நான்கு பேரில் ஒருவனாக தோள் கொடுத்து தாங்கினான்…

யாரோ ஒருவர் வந்து “தம்பி நேத்துலருந்து பச்சை தண்ணிக் கூட குடிக்காம கிடக்க…. உன்னால பாடையை தூக்கிக் கிட்டு நடக்க முடியாது.. நகருப்பா” என்று கூற…. அவரை உதறிவிட்டு இவனே சுமந்து சென்றான்

சுடலைக்கு சென்று அரிச்சந்திரன் கோவிலில் உடல் இறக்கப்பட்டு உடலை எரியூட்ட சுடலை காணிக்கையும் முழத் துண்டும் வைக்கப்பட்டு சில சம்பிரதாயங்கள் செய்யப்பட்டன… வந்தவரில் ஒரு பெரியவர் “ஏப்பா, செத்தவன் கல்யாணம் ஆகாதவன்…. அதுக்கான சடங்குகளை செய்துடுங்க” என்றதும்…

தூக்கதிலிருந்து விழித்தவன் திடுக்கென்று நிமிர்ந்த சத்யன்….. “இல்ல இல்ல” என்று அலறியவன் “என் சேதுவுக்கு கல்யாணம் ஆகிடுச்சு… எல்லாம் முறையா செய்ங்க” என்று கத்தினான்….

கூட்டத்தினர் அதிர்ந்தனர்…. இருந்தாலும் யாரும் எதுவும் கேட்கவில்லை…. முறையான சம்பிரதாயங்கள் முடிந்து சேதுவின் உடலை எடுத்து அடுக்கியிருந்த விறகுப் படுக்கையில் வைத்து வராட்டிகளால் மூடப்பட்டு கெரோசின் தெளிக்கப்பட்டது …. கால் பக்கமாக பெரிய கற்பூரக் கட்டியை வைத்தனர்…

குணாவிடம் கொல்லி கட்டையைக் கொடுத்து இருவர் அவனைத் தாங்கிப் பிடிக்க… நண்பனுக்கு தீயிட மாட்டேன் என்று கதறிய குணாவை சத்யன் வந்து அணைத்துக் கொண்டான்… இருவருமாக சேதுவின் உடலுக்கு நெருப்பு வைத்தனர்….

மளமளவென நெருப்பு பரவியதும்… நண்பர்கள் இருவரும் அதிலே பாய்ந்து விடுவது போல் கத்திக் துடிக்கவும் அவர்களை அங்கிருந்து அகற்றுவது பெரும்பாடானது….

எல்லாம் முடிந்து போனது…. வள்ளியின் மூன்று பிள்ளைகளில் ஒருவன் தனது நிரந்த தூக்கத்தால் இவர்களை மீளாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டுச் சென்றுவிட்டான்……

வீட்டுக்கு வந்து தலை முழுகிவிட்டு அப்படியே சுருண்டு விட்டவர்களை யாராலும் சமாதானம் செய்ய முடியவில்லை….

உறவில்லை என்றாலும் பல காலமாக அருகருகே வசித்த காரணத்தால் வேலு மட்டும் வள்ளியின் அருகே வந்து அமர்ந்து “அத்தை,, நீயும் இப்படி கிடந்தா இவனுங்க ரெண்டு பேரையும் யாரு பார்த்துக்குவா? போனவனுக்காக இருக்குறவனுங்களையும் இழந்துடாத அத்தை…. ஏதாவது சாப்பாடு ஆக்கி ரெண்டு பேருக்கும் குடுத்துட்டு நீயும் சாப்பிடு” என்று கூறினான்….

வள்ளிக்குப் புரிந்தது…. அதிலும் குணா பசிப் பொருக்காதவன்…. இதோ இரண்டாவது நாளாக பட்டினி…. மெல்ல தலையசைத்துவிட்டு மடியில் கிடந்த குணாவின் தலையை எடுத்து கீழே வைத்துவிட்டு சமையலறைக்குச் சென்று அடுப்பை பற்றவைத்தாள்….

சற்றுநேரம் கழித்து சத்யன் எழுந்து சென்று பீரோவைத் திறந்து பணத்தை எடுத்து வந்து வேலுவிடம் கொடுக்க…. வாங்கிக் கொண்ட வேலு செலவு போக மீதித் தொகையை சத்யனிடமேத் திருப்பிக் கொடுத்தான்….

“தைரியமா இரு மாப்ள,, குணாவுக்காக நீங்க ரெண்டுபேரும் தைரியமா இருக்கனும்… அவனைப் பாருடா” என்று வேலு கூறவும் தரையில் சுருண்டு கிடந்த குணாவைப் பார்த்தான் சத்யன்….

அன்பில் நெஞ்சு விம்ம… கண்களில் தேங்கிய நீருடன் குணாவைத் தூக்கி உட்கார வைத்தான்…. உடல் நெருப்பாக கொதிக்க நடுங்கிக் கொண்டிருந்தான் குணா…

திகைப்புடன் நெற்றியில் கைவைத்துப் பார்த்து “அம்மா,, குணாவுக்கு காய்ச்சல் கொதிக்கிதும்மா” என்றதும்… வள்ளியும் வந்து தொட்டுப்பார்த்து ” அய்யோ இப்புடி கொதிக்கிதே… சீக்கிரம் ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போ சத்தி ” என்று பதட்டமாகக் கூறவும்….

குணாவைத் தாங்கித் தூக்கி பைக்கில் அமர வைத்து பின்னால் வேலுவை உட்கார வைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு கிளம்பினான்….

பரிசோதித்து ஊசிகள் போட்ட டாக்டர் “தன் கண்ணெதிரிலேயே நண்பன் கருகி இறந்ததை குணாவால தாங்க முடியலை சத்யன்…. சேதுவைப் பத்தியே யோசிச்சுக்கிட்டு இருக்காம ரொம்ப கவனமா பார்த்துக்கங்க…” என்று அறிவுரைக் கூறி அனுப்பினார்….

வீட்டுக்கு வந்து வள்ளி தயாரித்திருந்த கஞ்சியை குணாவுக்கு வலுக்கட்டாயமாக குடிக்க வைத்து பிறகு படுக்க வைத்து கம்பளியால் மூடிவிட்டான் சத்யன்….
வேலு அவன் வீட்டுக்கு சென்றுவிட அந்த இரவு முழுவதும் அடிக்கடி உடல் தூக்கிப் போட அலறி அலறி எழுந்த குணாவை பார்த்துக் கொள்வதே சரியாக இருந்தது…..

நடுநிசியில் குணாவின் காய்ச்சல் சற்று குறைந்ததும் அவன் அருகே அமர்ந்து கண்மூடியிருந்த நிலையிலேயே வள்ளித் தூங்கிப் போக… சத்யன் மட்டும் சுவற்றில் மாட்டியிருந்த இவர்கள் மூவரும் இருக்கும் புகைப்படத்தையேப் பார்த்திருந்தான்….

அதிகாலை இரண்டரை மணியளவில் ஏதோ சப்தம் கேட்டு கண்விழித்த வள்ளி அது என்ன சப்தம் என்று உற்றுக் கேட்க….. கல்லில் இரும்பை வைத்துத் தேய்க்கும் சப்தம் தான் அது….

திடுக்கிட்டு எழுந்து பக்கத்தில் பார்க்க…. சத்யன் இல்லை…. வேகமாக எழுந்து சப்தம் வந்த தோட்டத்துக்கு ஓடினாள்…. குணாவும் தூக்கம் கலைந்து வள்ளியின் பதட்டம் கண்டு பயந்து எழுந்து மெதுவாக தோட்டத்துக்கு வர…….

அங்கே துணி துவைக்கும் கல்லில் அமர்ந்து… விறகு வெட்டப் பயன்படுத்தும் பெரிய வீச்சருவாளை கல்லில் வைத்து தீட்டிக் கொண்டிருந்தான் சத்யன்…. அவன் கண்களில் தெரிந்த அனல் பட்டே அருவாள் கனல் தெறிக்கப் பளபளத்தது…..

அருவாளையும் அதைத் தீட்டிய மகனையும் கண்டு பயந்து நடுங்கிய வள்ளி வேகமாக அருகே ஓடிவர… குணாவும் பின்னாலேயே வந்தான்…

கல்லையே வெறித்தபடி சரக் சரக்கென்று அருவாளைத் தேய்த்தவனின் முகம் ரௌத்திரத்தைப் பூசியிருந்தது…. எதிரில் இருப்பவரை அனலாக்கும் ரௌத்திரம்…..

மகனின் முகத்தைப் பார்த்து நடுக்கத்துடன் இரண்டடி பின்னால் நகர்ந்தவள் அருகிலிருந்த குணாவின் கையைப் பற்றிக் கொள்ள…. தீட்டிய அருவாளில் தனது வலது கை பெருவிரலை வைத்து கூர் பார்த்தான் சத்யன்….

அருவாளின் கருக்கில் இவன் பெருவிரல் பட்டவுடனேயே ரத்தம் துளிர்க்க…. தனது ரத்தத்தையே வெறியுடன் பார்த்தவன் இவர்கள் இருவரையும் பயமுறுத்தினான்….

ரத்தம் வடியும் விரலுடன் நின்றவனைக் கண்டு கலங்கிப் போய் “அய்யா சாமி” மெல்லிய குரலில் மகனை அழைத்தாள் வள்ளி….
நெருப்புத் துண்டென ஜொலிக்கும் கண்களோடு திரும்பியவன் “போ…. போய் தூங்குங்க” என்று கர்ஜனையாக கூறினான்…….

“என்ன சாமி இந்த நேரத்துல அருவாளை வச்சிக்கிட்டு நிக்கிற? எதுவாயிருந்தாலும் கொஞ்சம் ஆறப் போட்டு செய் சாமி” அவனது ஆவேசத்தை அடக்கும் நோக்கில் மெல்லச் சொன்னாள்….

“எதைம்மா ஆறப்போட சொல்ற? என் சேது போய் ரெண்டு நாளாச்சு…. இத்தனை நாள் ஆறப்போட்டதே ரொம்பத் தப்பு…. அரக்கனை உடனே சம்ஹாரம் பண்ணியிருக்கனும்… சம்ஹாரம் பண்ணனும்மா….. அந்த நல்லுவை அழிக்கத்தான் ஆண்டவன் சேதுகிட்ட இருந்து என்னை பிரிச்சது…. சேது கடைசியா சொன்னப்ப அந்த பயங்கரத்துல நண்பனோட இழப்பு மட்டும் தான் தெரிஞ்சது…. அவனை சதி பண்ணி கொன்னவன் என் மனசுல பதியவே இல்லை…. இப்பதான் என் சுயம் திரும்பியிருக்கு…. இனி அந்த நல்லுவை அழிச்சிட்டு தான் மத்ததெல்லாம்….” என்று அந்த இரவில் காற்றைக் கிழிக்கும் கம்பீரக் குரலில் பேசியவனைக் கண்டு நடுங்கினாள் வள்ளி…..

“அரக்கனை அழிக்கனும் தான் சாமி…. ஆனா நீ இல்லாம இந்த வாயில்லாப் புள்ளையை வச்சுக்கிட்டு நான் என்ன செய்யட்டும்” தெய்வத்திடம் வரம் கேட்கும் பக்தையாக மகனிடம் இரு கையேந்தி நின்றாள் அம்மா….

“போ…. எங்கயாவது போங்க…. நானும் செத்துடுவேன்… நீங்களும் செத்துப் போங்க…. சேது போனதும் நாம மட்டும் ஏன் இருக்கனும்?” என்று கத்தியவன் தாயின் கண்ணீரை கண்டு சற்று தணிந்து “அம்மா,, அவன் இருக்கக் கூடாதும்மா… நான் கொல்வேன்” என்று சபதமாக சொல்லவும்…. சட்டென்று குணாவின் கையைப் பிடித்து இழுத்தபடி சத்யனின் காலில் விழுந்து விட்டாள் வள்ளி…. “எங்களையும் சேது கூடவே அனுப்பிட்டு நீ உன் இஷ்டப்படி செய் சாமி” என்றாள்….

பதறி விலகிய சத்யன் “அம்மா,, என்னம்மா இது?” என்று வேதனையுடன் தாயின் தோள்ப்பற்றித் தூக்கி நிறுத்த….

“ஆமாம்ப்பா…. ஒருத்தனை பிரிஞ்சதுக்கே இதோ இந்த வாயில்லா புள்ளை இப்படி ஆகிட்டான்…. இவனால் உன்னையும் பிரிஞ்சு இருக்க முடியுமா? அந்த நல்லுவை கொன்னப் பிறகு போலீஸ் உன்னை சும்மா விட்டுடுமா? நீ செயிலுக்குப் போனதும் எங்க ரெண்டு பேருக்கும் ஆதரவு யார் சாமி? என்னை விடு… இந்த புள்ளை முகத்தைப் பாருப்பா” என்று குணாவை இழுத்து சத்யனின் முன்னால் நிறுத்தினாள்….

சத்யனின் எதிரில் வந்த குணாவோ அவன் கையிலிருந்த கத்தியைப் பிடுங்கிக் கொண்டு தான் போய் நல்லுவைக் கொல்வதாகவும்… நீ இருந்து அம்மாவைப் பார்த்துக்கோ என்று சைகையில் சொல்லவும் உடைந்து போனான் சத்யன்….

நண்பனைக் கட்டிக் கொண்டு கதறியவன்….. “இப்போ நான் என்னதான் செய்றது?” என்று வேதனைக் குரலில் தாயைப் பார்த்துக் கேட்க….

“தப்பு செஞ்சவனை சும்மா விடக்கூடாது தான்ய்யா….. ஆனா நீ அவனை கொன்னு பழிதீர்த்துக்கிறதை விட ஊர் சனம் போலீஸ் இன்னும் எல்லாரும் முன்னாடியும் அவன் குத்தத்தை ஒத்து வைக்கனும் சத்தி…. அவன் வாயாலேயே ஒப்புக்கிட்டு செயிலுக்குப் போகனும்…. அதுக்கு ஏதாவது செய்ய முடியுமாப் பாரு” என்றாள் வள்ளி….

“அதெப்படிம்மா முடியும்? ஒரே நாள் விசாரணையில மின்கசிவுனு போலீஸே சொல்லிடுச்சு…. அவன் எப்படி உண்மையை ஒத்துக்குவான்?” குழப்பமாகக் கேட்டான்….

“ஒத்துக்க வைக்கனும்….. அத்தனை பேர் முன்னாடியும் அவன்தான் கொலை செய்தான் ஒத்துக்க வைக்கனும்…. அதுக்கு என்ன செய்யனும் எப்படி செய்யனும்னு நிதானமா யோசிச்சு முடிவு பண்ணு சத்தி… அதை விட்டுட்டு அவனை கொன்னுட்டு நீ செயிலுக்குப் போறதால மறுபடியும் இழப்பு நமக்கு தான்… ஒருத்தனை பலிக்கொடுத்த துயரமே இன்னும் தீரலை… உன்னையும் பலிகொடுக்க நான் தயாரா இல்லை” என்று உறுதியாகக் கூறினாள்….

இன்னும் அருவாளோடு நின்றிருந்த குணாவிடமிருந்து அதை வாங்கிக் கொண்டு “நம்ம ஜான்சிகிட்ட இருந்தும் எந்த தகவலும் இல்லை…. அவ கதி என்னாச்சுனு பார்க்கனும்….. வீட்டுக்குள்ள வந்து நிதானமா யோசிச்சுப் பாரு சத்தி…… ஏதாவது வழி கிடைக்கும்” என்று கூறிவிட்டு குணாவுடன் அம்மாவும் உள்ளே போய்விட சத்யன் மட்டும் அதே கல்லில் மீண்டும் அமர்ந்தான்…

அம்மா கூறியது போல் நல்லுவை கொலை செய்துவிடலாம்… ஆனால் அதன்பிறகு? தனது அம்மாவை விட குணாவின் எதிர்காலம் தான் பெரிதாகத் தெரிந்தது…. அவன் கிடைத்த நாளில் இருந்து வீட்டின் செல்லப்பிள்ளையாக வளர்த்து விட்டார்கள்…. தானாக சுயமாக சிந்திக்கத் தெரியாதவன்…. இந்த நாசக்கார உலகத்தில் அவனைத் தனியாக விட்டுவிட்டால்?d