தீக்குள் ஒரு தவம் – அத்தியாயம் – 9

Tamil Kamakathaikal ஒன்றும் புரியாமல் தலையில் கைவைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தவனை “இந்த நேரத்துல என்ன மாப்ள செய்ற?” என்று வேலுவின் குரல் அழைக்க திரும்பிப் பார்த்தான்….

பக்கத்து வீடு என்பதால் இவர்கள் பேசும் சப்தம் கேட்டு வந்திருப்பான் போலிருக்கு…. தனக்கு இப்போது ஆலோசிக்க நம்பகமான ஒரு நபர் தேவையென்று தோன்ற… அது வேலுவாக இருந்தால் தப்பில்லை என்று நினைத்து “இங்க வா வேலு” என்று அழைத்தான் சத்யன்…

இரு வீட்டுக்கும் நடுவேயிருந்த காம்பவுண்ட் சுவர் தாண்டி குதித்து வந்த வேலு… சத்யனின் அருகே அமர்ந்து “என்ன மாப்ள ஆச்சு?” என்று கேட்டான்

சற்றுநேரம் அமைதியாக இருந்த சத்யன்… ஒரு விரக்தியான பெருமூச்சுக்குப் பிறகு சேது ஜான்சி காதலில் ஆரம்பித்து இருவருக்கும் திருமணம் நடந்தது சேதுவின் கொலை வரை எல்லாவற்றையும் சொல்லி முடித்த சத்யன்…. “இப்போ நல்லுவை என்ன பண்றதுனு தான் புரியலை வேலு” என்றான்…

“நீயும் அம்மாவும் பேசினதை கேட்டேன் மாப்ள…. இப்போ உன் குடும்பம் இருக்குற நிலையில்… இந்த கொலை செய்ற முடிவை தூக்கித் தூரப் போடு…. அம்மா சொன்ன மாதிரி அவனை ஒத்துக்க வைக்கனும்…. ஒத்துக்க வச்சி சட்டமே அவனுக்கு தண்டனை கொடுக்கனும்… அதுபோல ஏதாவது செய் மாப்ள” என்று வேலும் அதே கூறினான்…

“ம் ம்” என்று தலையசைத்தவன் யோசனையுடன் அமர்ந்திருக்க… அவன் தோளில் கைவைத்த வேலு “மாப்ள.. நான் இங்க இருந்தா உனக்கு உதவுவேன்…. என் லீவு முடிய இன்னும் ஆறு நாள் தான் இருக்கு… மறுபடியும் பொழப்புக்காக வடக்கே போகனும்… இந்த ஆறு நாளுக்குள்ள ஏதாவது செய்யனும்னா சொல்லு… நான் செய்ய தயாரா இருக்கேன்” என்றான்…

உணர்ச்சிவசப்பட்டு பேசிய வேலுவை தோளோடு அணைத்துக் கொண்டான் சத்யன்….

வேலுவின் குடும்பம் சற்றுப் பெரியது… மூத்தவனை பட்டாசு விபத்தில் பலிகொடுத்ததால் பட்டாசு ஆலையில் வேலையே வேண்டாம் என்று ஹய்தராபாத் அருகே ஒரு கிராமத்தில் கல்குவாரியில் வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றுகிறான்…. இந்த நிலையிலும் உதவுகிறேன் என்ற கூறியது சத்யனை நெகிழ வைத்தது….

“சரி வேலு,, நிதானமா யோசிப்போம்… இந்த ஆறு நாளைக்குள்ள நம்மளால் என்ன செய்ய முடியுமோ அதை செய்யலாம்… நல்லுவை சும்மா விடக்கூடாது வேலு” என்றான்…

“சரி அவனை பழிவாங்கறதுக்கு உடம்புல தெம்பு வேணும்…அது வரை நல்லா சாப்பிட்டு உடம்பை தேத்து மாப்ள” என்ற வேலு தனது வீட்டுக்குச் செல்ல… சத்யனும் அடுத்து என்ன செய்வது என்ற யோசனையோடு வீட்டிற்குள் வந்தான்….

அடுத்து வந்த இரண்டு நாளும் யோசனையுடனேயே சென்றது…. குணாவுக்கும் அடிக்கடி காய்ச்சல் வருவதும் போவதுமாகவே இருக்க… அவனை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு அலையவும் சரியாக இருந்தது….

மூன்றாவது நாள் குணாவின் உடல் தேறிவிட அவனை அழைத்துக் கொண்டு வேலுவுடன் கண்மாய்க்குச் சென்றான் சத்யன்….

கண்மாயைப் பார்த்ததும் குணாவுக்கு அழுகை வெடிக்க… “ஏய் குணா,, இனி நாம ஒரு சொட்டுக் கண்ணீர் விடக்கூடாதுடா…. நம்ம சேதுவை கொன்னவனை பழிவாங்கும் எண்ணம் தவிர வேற எதுக்கும் மனசுல இடம் கொடுக்காதே” என்று அதட்டலாக கூறவும் குணா தனது கண்ணீரை அடக்கிக் கொண்டான்…

“சரி சத்யா,, என்னதான் முடிவு பண்ணிருக்க?” என்று வேலு கேட்க….

யோசனையுடன் தலையசைத்த சத்யன் “முடிவு பண்ணிட்டேன் வேலு…. நல்லுவை நடைப்பிணமாக்குறதுனு முடிவு பண்ணிட்டேன்… அந்த துயரத்துலயே அவன் தானா போய் போலீஸ் கிட்ட குற்றத்தை ஒப்புக்கனும்” என்று ஆத்திரம் தெறிக்கும் குரலில் பேசினான் சத்யன்…

“அது எப்படி முடியும் மாப்ள? அவன் எதுக்கும் அசையாதவன் ஆச்சே?” என்று குழப்பமாகக் கேட்டான்…

“அசைவான் வேலு,, அவனுக்குப் பிடித்தமானவங்களை தூக்கினா தானா அசைவான்…” என்றான் சத்யன்…

“அவன் தான் பொண்டாட்டி புள்ளைக்கு கூட மரியாதை தரமாட்டான்னு ஊருக்கே தெரியுமே? வேற யாரை தூக்கப் போற?”
வேலுவைத் திரும்பிப் பார்த்து ஏளனமாக சிரித்த சத்யன் “அவன் சின்ன மகளை விட்டுட்டயே வேலு? அவன்னா இந்த நாய்பயலுக்கு உயிராச்சே? அவளை தூக்கி நாலு போட்டு குத்துயிரும் கொலையுயிருமா ஆக்கி மிரட்டினா, தானா போய் உண்மையை சொல்வான்” என்றதும்…. “ம் கரெக்ட் மாப்ள… ஆனா எப்படி?” என வேலு கேட்டான்….

“அதுக்குத்தான் உன்னோட உதவி வேணும்…. மொதல்ல அவ இங்கே இருக்காளானு தெரியனும்… அடுத்து அவ எங்க போறா வர்றானு கண்காணிக்கனும்… அப்புறம் கரெக்ட்டா சமயம் பார்த்துத் தூக்கனும்…. அப்புறம் ஒரு வாரம் கழிச்சு அவ அப்பனுக்கு தகவல் சொல்லனும்”

“ஒரு வாரம் கழிச்சினா? எனக்குப் புரியலை மாப்ள?”

“அதாவது வேலு,, இப்போ இவளைக் கடத்துறோம்னா… கடத்தினதே அவ அப்பனுக்கு உடனேத் தெரியக்கூடாது… தெரிஞ்சா உடனடியா போலீஸ்கிட்ட போய்டுவான்…. அவங்க களத்துல இறங்கினா உடனே கண்டுபிடிக்க வாய்ப்பு இருக்கு…. நாம ஒரு வாரம் கழிச்சு அவனுக்கு தகவல் சொன்னா அந்த ஒரு வாரத்துல இந்தியாவோட எந்த மூலைக்கும் நாம போக வாய்ப்பிருக்குனு போலீஸ் கொஞ்சம் குழம்பும்… எங்க போய் தேடுறதுனு தவிக்கும்…. அந்த ஒரு வாரத்துல தன் மகள் என்ன ஆனாளோன்னு நல்லு பயப்படனும்… அந்த பயம் தான் நமக்குத் தேவை…. அதுக்காகதான் இந்த ஒருவார அவகாசம்” என்று சத்யன் தெளிவுப் படுத்தியதும்…

“பக்கா சத்யன்… பக்காவான ப்ளான்…. இப்போ நான் என்ன செய்யனும்?” வேலு அவசரமாக கேட்டான்….

“நாம செய்ய வேண்டியது நிறைய இருக்கு….. போலீஸை நாடு முழுக்க சுத்த விட்டுட்டு நாம இங்கயே தான் மேற்கு தொடர்ச்சி மலை காட்டுகள்ப் பக்கமா அவளை கடத்தி வைக்கனும்… அதுக்குத் தோதான இடம் பார்த்து வைக்கனும்… நல்லு குற்றத்தை ஒத்துக்கலைன்னா மாசகணக்கா கூட அவளை பதுக்க வேண்டியிருக்கும்…. அடுத்து நல்லு வீட்டுல இருந்து நமக்கு தகவல் சொல்ல ஒரு நம்பிக்கையான ஆள் வேணும்…. மூனாவதா தான் உனக்கு வேலை…. நீ ரயில்ல போனால் எங்க போய் இறங்குவ?” என்று வேலுவிடம் கேட்க…

புரியாமல் சத்யனைப் பார்த்த வேலு “ஹய்தராபாத்லதான் இறங்குவேன்… அங்கருந்து பஸ் பிடிச்சு குவாரி இருக்கிற இடம் போவேன்….” என்றான்….
“சரி,, இந்த முறை நீ என்ன செய்றேன்னா…… ஹய்தராபாத் தாண்டி வேற ஏதாவது பெரிய நகரத்துல இறங்கி நான் கொடுக்கிற பொருளை ரிஜிஸ்டர் போஸ்ட்ல அனுப்பி வைக்கனும்….. அதாவது நல்லுவோட மகள் கடத்தப்பட்டு வடநாட்டுப் பக்கமா இருக்கிற மாதிரி எல்லாரையும் திசை திருப்பனும்…. அடுத்து உன் கூட வேலை செய்றவங்க மூலமா ரெண்டு மூணு சிம்கார்டு அந்த ஊர்லயே வாங்கி நல்லுவோட வீட்டு நம்பருக்கு போன் செய்யனும்…. அதுக்கு அடுத்த முறை கம்பெனி நம்பருக்கு… இன்னொருமுறை அவனோட மேனேஜர் நம்பருக்கு…. கடைசியா நல்லுவோட செல் நம்பருக்கு போன் செய்யனும்…. அதாவது யார் பேசுறாங்கன்னு கண்டு பிடிக்க முடியாதபடி ரெண்டு வார்த்தைக்கு மேல பேசக் கூடாது…. மற்றவிபரங்களை அனுப்பி வைக்கிற பார்ஸல்ல லட்டரா எழுதி வைச்சு அனுப்பலாம்…. அதாவது நான் அவ கூட இங்கே இருக்கும் போது நீ அங்க இருந்து எல்லாத்தையும் செய்து திசை திருப்பனும்…. நிறைய கவனமெடுத்து செய்ய வேண்டிய வேலை வேலு… கொஞ்சம் பிசகினாலும் மாட்டிக்குவோம்….” என்றான் சத்யன்……

அசந்து போனான் வேலு “கரெக்ட்டா இருக்கு யோசனை…. அப்புறம் அந்த பொண்ணை?”

“அவளை வச்சுக்கிட்டு நாம என்ன செய்யப் போறோம்… அவ அப்பன் உண்மையை ஒத்துக்கிட்டதும் இவளை விரட்டிவிட வேண்டியதுதான்…. என்ன,, கடத்தல் குற்றத்துக்காக என்னை கைது பண்ணுவாங்க… பரவால்ல….” என்று அலட்சியமாக கூறியவன்,

“இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கு வேலு…. அம்மாவுக்கும் குணாவுக்கும் எந்த பாதிப்பும் வராம செய்துட்டுப் போகனும்…. அதாவது போலீஸோ நல்லுவோ வந்து இவங்களை டார்ச்சர் பண்ணக்கூடாது…. அதுக்காக சில ஏற்பாடுகள் செய்யனும்” என்றான்…

“என்ன ஏற்பாடு செய்யனும்?” என வேலு கேட்க…..

“குணாவால பேசமுடியாது அப்படின்றதால மனித உரிமை கமிஷனுக்கு ஒரு கடிதம் எழுதிப் போடனும்… நாம நல்லுவுக்கு அவன் மகளை கடத்தின விஷயத்தை சொல்றதுக்கு முதல் நாள் இந்த லட்டரை மனித உரிமை ஆணையத்துக்கு அனுப்பனும்… குணாவே தன் கைப்பட எழுதி அனுப்பனும்…. கடிதம் எப்படி எழுதனும்னு நான் அப்புறமா சொல்றேன்…. அதுக்கு முன்னாடி நல்லு வீட்டுத் தகவல் தெரிய ஒரு ஆள்த் தேவை… அது யாருன்னு மொதல்ல தேடனும்” என்றான் சத்யன்…

எல்லாவற்றையும் கவனமாகக் கேட்ட குணா… வேலுவின் தோள்களைப் பற்றிக்கொண்டு ஏதோ சொல்ல… “ஆமா குணா…. நீ சொல்றது சரிதான்…” என்றவன் சத்யன் பக்கமாகத் திரும்பி “நம்ம கூட எட்டாவது வரை படிச்சுதே தேன்மொழி…. அந்தப் புள்ளையோட பெரியக்கா பாண்டியம்மா நல்லு வீட்டுலதான் வேலை செய்யுது…. நல்ல குணம் தான்… அதுக்கிட்ட உதவிக் கேட்டுப் பார்ப்போம் சத்யா” என்று கூறவும்….
“எனக்கு அந்தக்காவை அவ்வளவாத் தெரியாது வேலு… நம்ம தேன்மொழி மூலமா போய் உதவி கேட்போம்…. நமக்கும் நிறைய ரகசிய உதவிகள் வேணும் வேலு…. நாம இல்லாத நேரத்துல அம்மாவையும் குணாவையும் பார்த்துக்கனும்” என்று சத்யன் சொன்னதும்….

“நீ சொல்றதும் சரிதான்… தேன்மொழிக்கிட்ட கேட்ப்போம்… சீக்கிரமா இதையெல்லாம் முடிச்சாதான் நான் ஊருக்குப் போறதுக்குள்ள நீ குடுக்குறதை எடுத்துட்டுப் போகனும்” என்றவன் ஏதோ ஞாபகம் வந்தவன் போல் “ஆமா என்ன பார்ஸல் சத்யா அது?” என்று கேட்க…

“மொதல்ல அவளை கடத்துவோம்.. அப்புறம் தான் எதை கொடுத்தனுப்புறதுனு முடிவு செய்யனும்” என்றவன் வேலுவின் கைகளைப் பற்றிக்கொண்டு “வேலு இதனால உனக்கு எந்த பிரச்சனையும் வராது…. அப்படி நீ மாட்டிக்கிற மாதிரி இருந்தா அடுத்த நிமிஷமே அந்த பொண்ணை ஒப்படைச்சிட்டு நான் சரண்டர் ஆகிடுறேன் வேலு…” என்றான்…

“என்ன மாப்ள இப்புடி சொல்லிட்ட? நான் மட்டும் பொழப்புக்காக வடக்கே போகலைன்னா நாம நாலு பேராத்தானேடா இருந்திருப்போம்… சேது எனக்கும் தானடா நண்பன்… இருக்கிறதை சாப்ட்டு ஒன்னா பள்ளிக்கூடம் போன நாட்களை மறக்கமுடியுமா? சேதுவுக்காக நான் இதைக்கூட செய்யமாட்டேனா மாப்ள?” என்று கண்கலங்க கூறியதும்… “மன்னிச்சிடு வேலு” என்று அணைத்துக் கொண்டான்….

அதன்பிறகு இருக்க இடம்… தேவையானப் பொருட்கள்… பாதுகாப்புக்காக என்னென்ன செய்யவேண்டும் என்று மூவரும் சேர்ந்து கலந்தாலோசித்துவிட்டு தேன்மொழியைத் தேடிப் போனார்கள்….

மாலை வேலை முடிந்து எல்லோரும் வீட்டுக்கு வரும் வேலையில் இரண்டுத் தெரு தள்ளியிருந்த தேன்மொழியின் வீட்டுக்கு மூவரும் சென்றனர்….

இவர்களைப் பார்த்ததுமே தேன்மொழிக்கு கண்ணீர் தான் வந்தது…. சத்யனின் கையைப் பற்றிக்கொண்டு “சேது நம்மளையெல்லாம் விட்டுட்டுப் போய்ட்டானே சத்தி” என்று விசும்பியவளின் கையை ஆறுதலாகத் தட்டிய சத்யன் “அவன் எங்க போனான் தேனு? சதி பண்ணி அனுப்பிட்டாங்க” என்றான்…

அதிர்ந்தவளாய் “என்னடா சொல்ற? என் அக்கா சொன்னது தான் நடந்துடுச்சா?” என்று கேட்க..

சுதாரித்த சத்யன் “உன் அக்கா என்ன சொல்லுச்சு… மொத அதைச் சொல்லு?” என்று கேட்டான் வேலு…

“கொஞ்சம் இரு வர்றேன்” என்றவள்…. இவர்கள் பேசுவதை கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த அவள் கணவன் சங்கரிடம் சென்று “இதோப்பாரு புள்ளையைத் தூக்கிக்கிட்டு கொஞ்சநேரம் வெளித் திண்ணையில உட்கார்ந்து யாராச்சும் வர்றாங்களானு பாரு… நான் இவனுகக்கிட்ட விபரம் சொல்லிட்டு வர்றேன்” என்றதும் “சரி புள்ள… ஜாக்கிரதை” என்று கூறிவிட்டு குழந்தையைத் தூக்கிக் கொண்டு வெளியேச் சென்றான்…

“சத்யா,, மொதலாளி மக ஜான்சிக்கும் நம்ம சேதுவுக்கும் கல்யாணம் நடந்தது நல்லுவுக்குத் தெரிஞ்சு போச்சு” என்றவள் மான்சி தன் அக்காவின் காதலையும் கல்யாணத்தையும் கண்டுப்பிடித்து அப்பனிடம் போட்டுக்கொடுத்து தாலியை கழட்ட வைத்ததிலிருந்து அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஜான்சிக்கு தனது அக்கா பாண்டியம்மாள் செல்போன் கொடுத்து உதவியது வரை ஒன்று விடாமல் எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள்….

நடந்தவைகளைக் கேட்டு ஆண்கள் மூவரும் அதிர்ந்து போயினர்…. சத்யன் கண்ணீருடன் தலையில் அடித்துக் கொண்டு தரையிலேயே அமர்ந்து விட்டான்….. “ஜான்சியின் நிலைமையும் இப்படியா?” என்று வேதனையுடன் கூறியவன் “சேது இறந்தது ஜான்சிக்குத் தெரியுமா?” என்றுக் கேட்க…

“இன்னும் தெரியாதுன்னு தான் என்று அக்கா சொன்னா சத்யா…. வீட்டைச் சுத்தி ஏகப்பட்டப் பாதுகாப்புப் போட்டிருக்காங்க…. ஜான்சியோட ரூம் வெளியவும் ஆள் இருந்துக்கிட்டே இருக்காங்களாம்….” என்றாள் தேன்மொழி.

“இப்போ என்ன செய்றது வேலு?” என்று சத்யன் கேட்க…. “ஜான்சி சம்மந்தமா இப்போ எதுவுமே செய்ய வேணாம் சத்யா… ஏன்னா,, சேது இல்லைனு தெரிஞ்சா ஜான்சி உயிரோடவே இருக்க மாட்டா…. அதைவிட நம்ம காரியம் முடியும் வரை நல்லுவோட பாதுக்காப்புல இருக்கிறதுதான் நல்லது…. நல்லு உள்ள போனதும் ஜான்சியை கூட்டி வந்துடலாம்” என்று வேலு கூறியதும் அதுவே சரியென்று சத்யனுக்கும் தோன்றியது….

“உங்க காரியமா? என்னடா செய்யப் போறீங்க?” என்று குழப்பமாக தேன்மொழி கேட்க… சத்யன் மெல்லிய குரலில் தனது திட்டத்தைக் கூறினான்….. எல்லாவற்றையும் கேட்ட தேன்மொழி நெகிழ்ந்து போய் “நண்பன் இறந்துட்டான்னு தெரிஞ்சதும் வெட்டுக் குத்துனு இறங்காம… சட்டப்படி நடவடிக்கை எடுக்கனும்னு நினைச்ச நீ ரொம்ப பெரியாள் தான் சத்யா…. நீ எதுக்கும் பயப்படாத…. சேது இறப்பில் நல்லு காட்டின அலட்சியமே ஊர் ஆளுங்க மத்தியில லேசா புகைய ஆரம்பிச்சிருக்கு… அதுவுமில்லாம உங்க மூணு பேரையும் பத்திதான் ஊர்ல எல்லாருக்கும் தெரியுமே…. நீ உன் வேலையைப் பாரு… ஒரு ஈ காக்கா கூட அம்மா குணா கிட்ட வராம நாங்கப் பார்த்துக்கிறோம்” என்று துணிவுடன் கூறினாள் தேன்மொழி…..
வெளியேயிருந்து உள்ளே வந்த தேன்மொழியின் கணவன் சங்கர் “சத்யா,, ஊருக்குள்ள நல்லுவுக்கு நிறைய எதிர்ப்பு இருக்கு… அது நமக்கு உதவும்… நீ மட்டும் மாட்டிகாத இடத்தில் ஜாக்கிரதையா இரு… எந்த உதவியா இருந்தாலும் கேளு செய்றோம்…” என்றதும் சத்யன் நன்றியுடன் அவன் கைகளைப் பற்றிக் கொண்டான்….

“சரி இப்போ நான் என்ன செய்யனும்?” என்று தேன்மொழி கேட்கவும்…. “அந்த வீட்டு அடங்காப்பிடாரி எங்கப் போறா வர்றானு உன் அக்கா மூலமா நோட் பண்ணி சொல்லனும்… அப்பதான் நாங்க எங்கத் திட்டத்தை செயல்படுத்த சரியா இருக்கும்” என்றான் சத்யன்…

யோசனையுடன் தலையை சொரிந்த தேன்மொழி “அந்தப் பொண்ணு யாரோ சினேகிதி வீட்டுக்கு போயிருக்குனு என் அக்கா சொன்னதா ஞாபகம்…. எதுக்கும் நாளைக்கு காலையில கேட்டுத் தகவல் சொல்றேன் சத்யா…” என்றவள் “இனி நீங்க யாரும் இங்க வரவேண்டாம்… அம்மாவை அனுப்பு… இல்லேன்னா என் வீட்டுக்காரர் செல்லுக்கு போன் பண்ணுங்க” என்று தெளிவாகக் கூறவும் சரியென்றுக் கூறிவிட்டு மூவரும் கிளம்பினர்….

“அடுத்து அவளைக் கொண்டு போய் எங்க வைக்கிறதுனு பக்காவா ப்ளான் பண்ணனும் மாப்ள….. ஆள் நடமாட்டம் இல்லாத இடமா இருக்கனும்” என்றான் வேலு….

“ஆமா வேலு… நாளை காலை பைக்கை எடுத்துக் கிட்டு மலையை ஒரு ரவுண்டு வரவேண்டியது தான்…. சரியான இடத்தை மொதல்ல முடிவு பண்ணிடலாம்.. நீ சாப்ட்டு ரெஸ்ட் எடு வேலு… எதுனான்னா போன் பண்றேன்” என்று கூறிவிட்டு குணாவுடன் வீட்டிற்கு வந்தான்….

நண்பர்களின் உதவி பெரும் ஆறுதலாக இருந்தது… திட்டத்தை சரியாக செயல் படுத்திவிடும் தைரியமும் இருந்தது….

ஆனாலும் மான்சிதான் மொத்ததிற்கும் காரணம் என்று தெரிந்ததும் உள்ளுக்குள் நெருப்பாய் வன்மம் பற்றிக் கொண்டது… ‘இரக்கமில்லாதவளே உனக்கு சாவு என் கையால தான்டி’ என்று உள்ளுக்குள் கறுவினான்…. இதுவரை வன்முறை வேண்டாம் என்றிருந்த அவனது முடிவு லேசாகப் பிசுபிசுக்க ஆரம்பித்தது……

மறுநாள் காலை எழுந்தவுடன் அம்மாவிடம் தனது திட்டத்தைக் கூறினான்…. மகன் மாட்டிக் கொள்ளக் கூடாதே என்ற பதட்டம் உள்ளிருந்தாலும்… கொலை செய்வேன் என்று கிளம்பியவன் இந்தளவுக்காவது சமாதானம் ஆகி குற்றவாளிக்கு தண்டனைப் பெற்றுத்தர நினைத்தானே அதுவேப் போதும் என்று எண்ணினாள்….
அம்மாவிடம் பேசும் போதே தேன்மொழியிடமிருந்து போன் வந்தது… ஆன் செய்து “சொல்லு தேனு” என்றதும்…

“சத்யா,, அந்த பொண்ணு ஊட்டிக்குப் போயிருக்காளாம்…. ஆனா நாளைக்கு வர்றதா பேசிக்கிறாங்களாம்…. அதுமட்டுமில்ல ஜான்சியோட அம்மாவுக்கு சேது இறந்த விஷயம் நேத்துதான் தெரிஞ்சிருக்கு…. அழுதுக்கிட்டே இருக்காங்களாம்… அவங்க மூலமா விஷயம் ஜான்சிக்குத் தெரிய வாய்ப்பிருக்குனு என் அக்கா சொல்றா… இப்போ என்ன செய்யலாம்” என்றாள் தேன்மொழி…

ஜான்சியை நினைத்து இதயம் துடிக்க சற்று நேரம் அமைதியாக இருந்த சத்யன் “தெரிஞ்சா தெரியட்டும் தேனு… உன் அக்கா கிட்ட சொல்லி அவளுக்கு எதுவும் ஆகாம… தப்பான முடிவுக்குப் போய்டாமப் பார்த்துக்க சொல்லு தேனு… அது போதும்” என்றான்….

“ம் சரி சத்யா,, அந்த பொண்ணு வந்ததும் அப்பப்ப தகவல் கொடுக்கச் சொல்லி என் அக்காக் கிட்ட சொல்லிருக்கேன்…”

“ம் சரி தேனு… கவனமா இருக்க சொல்லு” என்றான்…

“அப்புறம் மொதல்ல உன் பக்கத்து வேலைகளை முடிச்சு க்ளியர் பண்ணி வச்சுக்கோ” என்று கூறியதும்…

“இனி அதுதான் தேனு வேலையே” என்று சத்யன் சொன்னதும் சரியென்று கூறிவிட்டு தேன்மொழி இணைப்பைத் துண்டித்தாள்…

பகல் பதினோரு மணியளவில் குணாவை அம்மாவிடம் விட்டுவிட்டு வேலுவுடன் பைக்கில் கிளம்பி ஸ்ரீவில்லிப்புத்தூர் வழியாக வத்திராயிருப்பு வந்தடைந்தான்

கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் இடையே கன்னியாகுமரியில் ஆரம்பித்து மைசூர் வரை செல்லும் மேற்குத் தொடர்ச்சி மலை வத்திராயிருப்பில் மட்டும் சற்று உள்வாங்கி தமிழகத்துக்குள் வந்திருக்கும்… அந்த மலை மட்டும் இல்லையென்றால் ஸ்ரீவில்லிப்புத்தூருக்கும் கம்பத்திற்கும் சில கிலோமீட்டர் தூரமே இருந்திருக்கும்….

மலை நடுவே இருப்பதால் இரு ஊர்களுக்கும் தொடர்பற்றேத் தெரியும்…. இந்தப் பகுதியில் இருக்கும் மலைகள் காட்டு மிருகங்கள் நடமாடக்கூடிய பயங்கரமானவை… நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் மலையில் ஏறி மேற்கே இறங்கினால் பெரியார் டேம்…. அதே வடக்காக சென்று இறங்கினால் தேனி மாவட்டம் மேல் கூடலூர்… சற்று கிழக்கு நோக்கி சென்றால் மேகமலை…. ஆனால் அப்படி கடந்து சென்றவர்கள் யாருமில்லை என்பது தான் உண்மை….

இங்கே ஆங்காங்கே ஏராளமான மலைக் கிராமங்களும் ஆதிவாசிகள் எனப்படும் மலைவாழ் மக்களும் உண்டு…. முன்னேறி வரும் சுற்றுலாத்தலமான மேகமலைக்கு தேனி மாவட்டம் வழியாகத்தான் வரமுடியும்… அப்படியும் யானைகளிடம் மாட்டிக்கொண்டு தத்தளித்தவர்களும் உண்டு….

அப்படிப்பட்ட மேகமலை மறுபக்கம் ஏறினான் சத்யன்….

மலைகிராமங்கள் இருக்கும் இடம் வரை மாட்டுவண்டி போகும் அளவிற்கு ஒரு வழியிருக்க… மேலே போகப் போக அதுவும் இல்லை… எட்டிப்பார்த்தால் தலை சுற்ற வைக்கும் அதளபாதாளம்…. புலிகள் ஜாக்கிரதை… காட்டு யானைகள் உள்ளன, என்று பத்தடிக்கு ஒரு போர்டு வைக்கப்பட்டிருந்தது

கரடுமுரடான பாதையில் கவனமாக பைக்கை செலுத்தி வெகுதூரம் சென்ற பிறகு மலைக் குகைப் போனற ஒரு இடத்தைக் கண்டு கொண்டான்…… அதுவே சரியான இடம் என்று தோன்ற வேலுவும் சரியான இடம் என்றான்…..

மறுநாள் அதிகாலை தேவையானப் பொருட்களை எடுத்து வந்து வைத்துக் கொள்வது என்று பேசிக்கொண்டு மீண்டும் கீழே இறங்கினர்…

வரும் வழியில் கேட்ட யானைகளின் சலசலப்புக்கும்… மிருகங்களின் குரலுக்கும் அஞ்சவில்லை சத்யன்…. உயிர் போனாலும் அவளுக்கும் சேர்ந்து போகவேண்டும் என்று எண்ணி ஆத்திரத்தில் பல்லைக் கடித்தான்…

எல்லாம் முடிந்து இவர்கள் வீடு வந்து சேர்ந்த அதே நேரம் அங்கே நல்லுவின் வீட்டில் ஜான்சியின் அம்மா மூலமாக சேதுவின் இறப்பு அவளுக்குத் தெரிந்துவிட்டிருந்தது….

வேலைக்காரப் பெண் மூலமாக விஷயம் தெரிந்த கஸ்தூரிக்கு அதிர்ச்சி என்பதைவிட மகளின் வாழ்வை எண்ணி துயரம் தான் அதிகமானது…. இதை எப்படித் தாங்குவாள்? என்ற பயத்துடனேயே கணவனுக்குத் தெரியாமல் மகளின் அறைக்குப் போனாள்…

தாலியை இழந்ததற்கே உண்ணாமல் உறங்காமல் கிடக்கும் மகள்… தாலிக் கட்டியவனையும் இழந்துவிட்டோம் என்று தெரிந்தால் உயிருடன் இருப்பாளா? துயரம் தோய்ந்த முகத்துடன் மகளைக் கண்டாள்….

பாதியாய் மெலிந்த உடலுடன் படுக்கையில் கிடந்தாள்…. அனுப்பிய மெசேஜ்க்கு பதிலும் இல்லை…. சேதுவைப் பற்றியத் தகவலும் இல்லையென்றதும் இந்த சிறையில் இருந்து எப்போது விடுதலைக் கிடைக்கும் என்று தன் உயிரையே வெறுத்துக் கிடந்தாள்….

கட்டிலின் ஓரத்தில் அமர்ந்து மகளின் கூந்தலை வருடியதும் பட்டென்று திரும்பி ஜீவனற்ற விழிகளால் பார்த்து “அம்மா,, வந்துட்டயா? ஏதாவது வழி கிடைச்சதாம்மா? எப்படியாவது நான் அவர்கூட சேர்வதற்கு வழி சொல்லேன்ம்மா…” என்று கெஞ்சியவள் எழுந்து அமர்ந்து தாயின் கைகளைப் பற்றிக் கொண்டு “ப்ளீம்மா… ஏதாவது செய்ம்மா” என்று வேண்டினாள்….

கஸ்தூரிக்கு கண்ணீரைக் கொட்டுவதைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை…. மகளை இழுத்து மார்போடு அணைத்து “குடிமுழுகிப் போச்சேடி பாவிமகளே” என்று கத்தியபடி கட்டிக்கொண்டுக் கதற ஆரம்பித்தாள்….

தாயின் வார்த்தையும் கண்ணீரும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த தன்னிடமிருந்து பிய்த்து எடுப்பதுபோல் விலக்கி நிறுத்தி “என்னம்மா ஆச்சு?” என்று நடுங்கும் குரலில் கேட்டாள்….

எதைச் சொல்வாள் கஸ்தூரி?.. தாலியிழந்த மகள் தன்னவனையும் இழந்துவிட்டாள் என்பதை எப்படிச் சொல்வாள்? முகத்தை மூடிக்கொண்டு அழுதுச் துடித்தவளின் துடிப்பே விபரீதத்தை உணர்த்த, அம்மா இரு தோள்களையும் பற்றி பிய்த்துவிடுபவள் போல் உலுக்கியெடுத்து “அம்மா……. இப்போ சொல்லப் போறியா இல்லையா?” என்று அலறினாள் ஜான்சி….

“சதிகாரப் பாவிங்க திட்டம் போட்டு உன் புருஷனைக் கொன்னுட்டாங்கடி மகளே” என்று உரைத்துவிட்டு உயிர் வதையாய் வாடும் மகளை இழுத்து அணைத்துக் கொண்டாள் கஸ்தூரி